Content

உளவியல்

Read more »
ஏன் விளையாடனும்

அது பெரிய மைதானம். அங்கு 3 சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அந்த வழியாக சென்ற ஒரு முதியவர் அவர்களை கவனித்தார் குழந்தைகள் உற்சாகமாகச் சிரித்து விளையாடுவதை சிறிதுநேரம் ரசித்தார். அதன் பிறகு அவர் மெதுவாக கை தட்டி அவர்களை அழைத்தார்.

சிறுவர்கள், பெரியவரை மேலும் கீழும் பார்த்தார்கள். அவருடைய வினோத உடை அலங்காரமும், ஜடாமுடியும் அவர்களுக்கு சிரிப்பு மூட்டின.

அவர் அவர்களைப் பார்த்து " கண்ணுகளா, நீங்க எப்பவும் இந்த மைதானத்தில் தான் விளையாடுவீங்களா ?"

"ஆமாம்" என்றனர்.

"எதுக்காக தினமும் விளையாடுறீங்க ? அதனால உங்களுக்கு என்ன பலன்? "

முதல் சிறுவன் சொன்னான் " நல்லா விளையாடினா உடம்பு பலமாகும். அதுக்கு அப்புறம் நாம் யாரையும் பார்த்துப் பயப்பட வேண்டியதில்லை. எதிர்த்து வர்றவங்களையெல்லாம் ஊதிதள்ளிடலாம்"

இந்த பதிலைகேட்ட பெரியவருக்கு மிகவும் மகிழ்ச்சி. " நீ பெரிய பயில்வானாக வருவே " என்றார்.

அதன் பிறகு, 2 வது சிறுவனிடம் "நீ ஏனப்பா தினமும் விளையாடுறே?" என்றார்.

அவன் " ஜாலியா விளையாடினாத்தான் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும். அதுக்கப்புறம், முகத்தை கழுவி விட்டு உட்க்கார்ந்து படிச்சா, எல்லாம் சட்டுன்னு மண்டைல ஏறும்" னு சொன்னான். 

"பிரமாதம் நீ பெரிய படிப்பாளியா வருவே" 

பிறகு 3 வது சிறுவனிடம் அதே கேள்வியை கேட்டார்.

அவன் சுருக்கமாகப் பதில் சொன்னான். "எனக்கு விளையாடப் பிடிக்கும். அதான் விளையாடுறேன்" என்றான்.

அந்த பெரியவன் அச்சிறுவனை ஆச்சிரியத்துடன் பார்த்தார். " இனிமே நீ தான் என்னோட குரு" என்றார். 


ஆகவே.. ஒவ்வொன்றுக்கும் காரணம், பின் விளைவுகள், லாப நஷ்டங்களை எல்லாம் யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்காமல், அந்த கனத்தைச் சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள்.

Read more »

Sample text

Blogger news

Blogger templates

Powered by Blogger.

Ads 468x60px

Popular Posts

About Me

King Bakrudeen
View my complete profile

Popular Posts

Featured Posts

Followers